பத்து கேவ்ஸ்:
முன்பொரு காலத்தில் தமிழ்ப்பத்திரிக்கைகளிடையே ஒற்றுமை காணப்படுவது அரிது. தற்போது எல்லோரும் ஒன்றாக இருப்பதை காண்பதில் மகிழ்ச்சியாக உள்ளது.
நடப்பில் பத்திரிக்கைகள் பல்வேறு சவால்களை எதிர்நோக்கியுள்ள நிலையில், அவர்கள் அனைவருக்கும் மருத்துவ காப்புறுதி பெற, மலேசியத் தமிழ்ப் பத்திரிக்கையாளர் சங்கம் முனைப்பு காட்ட வேண்டுமென, நேற்று சனிக்கிழமை நடைபெற்ற குடும்ப தின விழாவில் ம.இ.கா. துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் வலியுறுத்தினார்.
இதனிடையே, நிகழ்ச்சியில் பேசிய சங்கப் பொருளாளர் கிரிஸ்ட் சின்னப்பன், உறுப்பினர்களுக்கு மருத்துவக் காப்புறுதி திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அதற்காக, ஐந்து காப்புறுதி நிறுவனங்களிடம் பேசப்பட்டுள்ளதாகவும் உரிய கட்டணத்துடனும் சலுகைகளுடனும் காப்புறுதி கிடைக்கும்பட்சத்தில், உறுப்பினர்களுக்கு அந்த பாதுகாப்பு வழங்கப்படும் என கிரிஸ்ட் உறுதியளித்தார்.
முன்னதாக, நிகழ்ச்சியில் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி மூத்த ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டனர். ஆடல், பாடல், அதிர்ஷட குலுக்கள் என பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றன.
நிகழ்ச்சியில், சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு, ம.இ.கா. முன்னாள் உதவித் தலைவர் டத்தோ டி.மோகன், பிரதமரின் இந்திய விவகாரஙகளுக்கான அதிகாரி ஷண்முகன் மூக்கன் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

