Site icon அநேகன்

விரைவுப் பேருந்து கவிழ்ந்தது; 39 பயணிகள் உயிர் தப்பினர்!

கினாபாத்தாஙான்:

சபா, சண்டக்கான்-லாஹாட் டத்து சாலையில், விரைவுப் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானது.

அதில் பயணித்த 39 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். கோத்தா கினபாலுவிலிருந்து செம்பூர்ணா நோக்கிச் சென்ற அந்தப் பேருந்து, திடீரென குறுக்கே வந்த மோட்டார் சைக்கிளை தவிர்க்க முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர புல்வெளியில் சாய்ந்தது.

ஞாயிற்றுக்கிழமை காலை 11.40 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில் ஓட்டுநர் உட்பட யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.

Exit mobile version