Site icon அநேகன்

கோலா கிராயில் போலீஸ்காரர் மீது தாக்குதல்: கும்பல் அடாவடி

கோலா கிராய்:

கிளந்தான், கோலா கிராயில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் ஓட்டியவரை பிடிக்க முயன்ற போலீஸ் அதிகாரி, அங்கிருந்த கும்பல் தாக்கியதில் காயமடைந்தார்.

தடைசெய்யப்பட்ட பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் என எச்சரித்தும், கலைந்து செல்ல மறுத்த கும்பல் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அச்சுறுத்தல் விடுத்தனர்.

இந்தச் சம்பவம் சனிக்கிழமை அதிகாலை குச்சில் சதுக்கத்தில் (Dataran Guchil) நிகழ்ந்ததாகவும், போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version