கோலாலம்பூர்:
கடந்த ஆண்டின் இறுதியில் ம.இ.கா. தலைவர் தான் ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன், பெரிக்காத்தான் நேஷ்னல் (PN) கூட்டணியில் இணைய விருப்பம் தெரிவித்தார்.
2025 இறுதியில் தான் ஸ்ரீ முஹியிடின் யாசின் தலைமையில் நடந்த கூட்டத்தில் ம.இ.கா.வின் விருப்பம் கொள்கை அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
தற்போது, ம.இ.கா. தனது முடிவை மாற்றிக்கொண்டால் அதனால் தங்களுக்கு எந்த இழப்பும் இல்லை என PN துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ துவான் இப்ராஹிம் துவான் மான் கூறியுள்ளார்.

