கோலாலம்பூர்:
BUDI95 திட்டத்தின் கீழ் RON95 பெட்ரோல் மாதாந்திர ஒதுக்கீட்டை 300 லிட்டரிலிருந்து 200 லிட்டராக தற்காலிகமாக குறைக்கப்படுகின்றது.
இந்த மாற்றம் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும்.
ஆனாலும், RON95 விலை லிட்டருக்கு RM1.99 என மானியத்துடன் தொடரும். உலகளவில் எண்ணெய் விநியோகமும் பொருளாதாரமும் சீராகும் வரையில் இந்த மாற்றம் அமலில் இருக்கும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
அதேவேளை, e-hailing ஓட்டுநர்களுக்கான மாதாந்திர ஒதுக்கீடு 800 லிட்டராக மாற்றமின்றி தொடரும் என்றும் அவர் கூறினார்.

