கோலாலம்பூர்:
தேசிய முன்னணியில் நீடிக்க, ம.இ.கா. எடுத்துள்ள முடிவு தைரியமற்ற அரசியல் அணுகுமுறை என உரிமை தலைவர் பேராசிரியர் பி. ராமசாமி விமர்சித்தார்.
பெரிக்காத்தான் நேஷ்னலில் சேர வாய்ப்பு இருந்தும், அதனால் ஏற்படக்கூடிய இழப்பின் பயத்தில் ம.இ.கா. தெளிவான முடிவு எடுக்கவில்லை.
மேலும், கட்சி தலைமைக்கும் அடிப்படை உறுப்பினர்களுக்கும் இடையிலான இடைவெளி, இந்திய சமூக பிரச்சினைகளில் கவனம் குறைவு ஆகியவை ம.இ.காவை பலவீனப்படுத்தியுள்ளதாக அவர் கூறினார்.

