கோலாலம்பூர்:
மலேசியாவில் இந்திய உணவகங்களுக்கு புதிய மற்றும் மாற்று (Gantian) வெளிநாட்டு தொழிலாளர் அனுமதிகள் வழங்கப்படவில்லை என மலேசிய இந்திய உணவக உரிமையாளர்கள் சங்கமான PRIMAS குற்றம்சாட்டியுள்ளது.
பிற இன உணவகங்களுக்கு அனுமதி வழங்கப்படுகின்ற நிலையில், இது பாகுபாடாக உள்ளதாக அதன் தலைவர் டத்தோ ஜே. கோவிந்தசாமி கூறினார்.
பணியாளர் பற்றாக்குறை அதிகரிப்பால், தொழில் பாதிக்கப்படுவதாக அவர் கவலைத் தெரிவித்தார்.

