Site icon அநேகன்

உயரமான கட்டிடங்களில் ஓட்டுநர் பயிற்சி மையங்கள்: JPJ புதிய அனுமதி!

கோலாலம்பூர்:

நிலப்பற்றாக்குறையைத் தவிர்க்க உயரமான கட்டிடங்கள், வர்த்தக தளங்கள் மற்றும் கிடங்குகளில் ஓட்டுநர் பயிற்சி மையங்களை அமைக்கலாம் என சாலை போக்குவரத்து துறை (JPJ) தலைமை இயக்குநர் டத்தோ ஏடி பட்லி ரம்லி தெரிவித்துள்ளார்.

கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு மட்டுமே பொருந்தும் இத்திட்டம், கடுமையான பாதுகாப்பு விதிமுறைகளின் கீழ் செயல்படுத்தப்படும்.

புதிய மையங்களுக்கான நில அளவு மற்றும் தூரம் குறித்த பழைய கட்டுப்பாடுகள் தற்போது நீக்கப்பட்டுள்ளன.

Exit mobile version