Site icon அநேகன்

எரிபொருள் விலை உயர்வால் உணவுப் பொருட்கள் 50% வரை விலை உயர வாய்ப்பு

கோலாலம்பூர்:

டீசல் விலை உயர்வால் போக்குவரத்து மற்றும் மூலப்பொருள் செலவு அதிகரித்துள்ளதால், உணவுப் பொருட்களின் விலை 50 சதவீதம் வரை உயரக்கூடும் என மலேசிய அங்காடிகள் மற்றும் வர்த்தகர் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே 20-30 சதவீதம் உயர்ந்துள்ள நிலையில், தற்போதைய சூழலால் சிறு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

லாப வரம்பு குறைந்துள்ளதால், சிறு வியாபாரிகள் வேறு வழியின்றி விலையை உயர்த்தும் கட்டாயத்தில் உள்ளதாக அதன் தலைவர் டத்தோ ஸ்ரீ ரோஸ்லி சுலைமான் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version