Site icon அநேகன்

கூலிம் தோட்டத்தில் எரிந்த நிலையில் ஆண் சடலம் மீட்பு: இருவர் கைது

கூலிம்:

கெடா, கூலிம் அனாக் தோட்டத்தில் உள்ள மலைச்சரிவு பகுதியில், மோட்டார் சைக்கிளுடன் எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத ஆடவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டது.

பறவை பிடிக்கச் சென்ற நபர் ஒருவர் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கடந்த நான்கு நாட்களாக காணாமல் போன ஒருவரின் மோட்டார் சைக்கிள் அது என்பதை உறுதிப்படுத்தினர்.

இச்சம்பவம் தொடர்பாக 22 மற்றும் 68 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டு, கொலைக் குற்றச்சாட்டின் கீழ் (பிரிவு 302) நான்கு நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

Exit mobile version