கோலாலம்பூர்:
1998-ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்த முன்னாள் நடைப்பந்தய வீரர் ஜி. சரவணன், தற்போது ‘மோட்டார் நியூரான்’ (MND) எனும் கொடிய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அவரது உடல்நிலை மற்றும் நிதி நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, அவருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கப்போவதாக இளைஞர் விளையாட்டு அமைச்சர் டாக்டர் தௌபிக் ஜொஹாரி உறுதியளித்துள்ளார்.
விரைவில் சரவணனின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து, அவர்களது தேவைகளை அறிந்து உரிய ஆதரவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

