Site icon அநேகன்

பாப்பகோமோவிற்கு ரிம 4,000 அபராதம்: பேரரசரை அவமதித்ததாகத் தீர்ப்பு

கோலாலம்பூர்:

சர்ச்சைக்குரிய வலைப்பதிவர் பாப்பகோமோ (வாண் முகமது அஸ்ரி), பேரரசரை அவமதிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் கருத்து வெளியிட்டதற்காகக் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார்.

கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் அவருக்கு ரிம4,000 அபராதம் விதித்தது; அபராதத்தைச் செலுத்தத் தவறினால் நான்கு மாத சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என நீதிபதி நோர்மா இஸ்மாயில் உத்தரவிட்டார்.

2024-ஆம் ஆண்டில் ‘X’ தளத்தில் KK Supermart விவகாரம் தொடர்பாக அரசரை இழிவுபடுத்தும் வகையில் பதிவிட்டதே இந்தத் தண்டனைக்குக் காரணமாகும்.

முன்னாள் போலீஸ் அதிகாரியான இவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளைத் தற்காப்புத் தரப்பால் முறியடிக்க முடியாததால், இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்தது.

Exit mobile version