Site icon அநேகன்

வாக்குமூலத்திற்கு பின் காளிதாஸ் ஜாமினில் விடுவிப்பு

கூலிம்:

கெடா, கூலிமில் செய்தி சேகரித்ததற்காக கைது செய்யப்பட்ட தினத்தந்தி நிருபர் காளிதாஸ் சுப்ரமணியம், போலீசார் வாக்குமூலம் பதிவு செய்த பின்னர் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

முன்னதாக, அவர் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டதற்காக கண்டனங்கள் எழுந்திருந்தன.

கூலிம் ஹைடெக் பார்க்கில் சட்டவிரோத அந்நிய தொழிலாளர்கள் குறித்து செய்தி சேகரிக்க சென்ற காளிதாஸ், பின்னர் சம்பந்தப்பட்ட பகுதியில் அத்துமீறி நுழைந்தது தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் நேற்று கைது செய்யப்பட்டிருந்தார்.

அவரது கைதுக்கு மலேசிய தமிழ் பத்திரிக்கையாளர்கள் சங்கம், மலேசிய ஊடக மன்றம் முதலானவை கண்டனம் தெரிவித்திருந்தது.

Exit mobile version