Site icon அநேகன்

குடும்பத்துக்கு கடன் வழங்கிய விஜய்; வேட்புமனுவில் தெரிவித்துள்ளார்!

சென்னை:

வரும் தமிழ்நாட்டு சட்டமன்றத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கில் போட்டியிடுகின்றார்.

நேற்று பெரம்பூர் தொகுதிக்காக வேட்புமனுவை அவர் தாக்கல் செய்திருந்தார்.

அதில், தந்தை சந்திரசேகருக்கு ரூ. 3.02 கோடியும், தாய் ஷோபாவுக்கு ரூ.87 லட்சமும், மகன் சஞ்சய்க்கு ரூ.8.78 லட்சமும், மகள் திவ்யாவுக்கு ரூ.4.6 லட்சமும் கடனாக கொடுத்துள்ளதாகவும்,

மனைவி சங்கீதாவுக்கு ரூ. 12.60 கோடி கடன் கொடுத்துள்ளதாக  தகவலளித்துள்ளார்.

அவரது இந்த அறிவிப்பு தமிழக தேர்தலில் பேசுபொருளாகியுள்ளது.

Exit mobile version