கோலாலம்பூர்:
குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் விவகாரத்தில், மது பரிமாறும் வணிக நிறுவனங்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
மதுக்கடைகளுக்கு ‘டிராம் ஷாப் லெபிலிட்டி’ (Dram Shop Liability) எனும் பொறுப்புடைமைச் சட்டத்தை உரிம நிபந்தனையாக அறிமுகப்படுத்த வேண்டும்.
அது தவிர, மது உற்பத்தியாளர்கள் சாலைப் பாதுகாப்பு நிதிக்கு பங்களிக்க வேண்டும் என்றும், சில்லறை விற்பனை நிலையங்களில் மது விற்பனை நேரத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பிகேஆர் (PKR) இளைஞர் அணியின் அரசு சாரா அமைப்பு மற்றும் தன்னார்வளர் பிரிவு தலைவர் ஷாபிக் இக்ரம் வலியுறுத்தினார்.

