Site icon அநேகன்

“புதிய வீடு என்பது ஏற்கனவே இருக்கும் கட்சியாகவும் இருக்கலாம்!”

கோலத்திரெங்கானு:

“நான் ‘புதிய வீடு’ என்று கூறியது ஒரு புதிய கட்சியைத்தான் குறிக்க வேண்டும் என்பதில்லை” என்று பெர்சாத்து முன்னாள் துணை தலைவர் டத்தோ ஸ்ரீ ஹம்சா ஸைனுடின் கூறினார்.

“அந்த வீடு ஏற்கனவே தயாராக இருக்கலாம், அது பெரிகாத்தான் நேஷனல் (PN) கூட்டணியில் உள்ள ஒரு கட்சியாகக் கூட இருக்கலாம்” என அவர் சூசகமாகக் கூறினார்.

பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் என் பக்கமே உள்ளனர்!”

“நான் இன்றும் பெரிகாத்தான் நேஷனல் வழங்கிய அங்கீகாரத்தின் அடிப்படையிலேயே நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிக்கிறேன்” என்று டத்தோ ஸ்ரீ ஹம்சா ஸைனுடின் உறுதியாகத் தெரிவித்தார்.

“25 பெர்சத்து எம்.பி.க்களில் 19 பேர் என்னுடன் இருக்கிறார்கள், அப்படியிருக்கையில் நான் அங்கு இருப்பது எப்படி தகுதியற்றதாகும்?” என அவர் கேள்வி எழுப்பினார்.

தமக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமின்றி, நாடு முழுவதும் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவும் இருப்பதாக அவர் கூறினார்.

“மலாய் தலைமைத்துவமும் நீதியான ஆட்சியுமே எமது இலக்கு”

“தனிப்பட்ட நபர்களின் அரசியல் வாழ்வைத் தாண்டி, இந்த நாட்டின் போராட்டங்கள் தொடர வேண்டும் என்பதே முக்கியம்” என டத்தோ ஸ்ரீ ஹம்சா ஸைனுடின் வலியுறுத்தினார்.

“அனைவருக்கும் நீதி வழங்கத் தெரிந்த ஒரு மலாய் தலைமைத்துவத்தையே இந்த நாட்டு மக்கள் எதிர்பார்க்கிறார்கள்” என்று அவர் குறிப்பிட்டார்.

மதக் கோட்பாடுகள் மற்றும் ருக்குன் நெகாரா (Rukun Negara) ஆகியவற்றைப் பின்பற்றியே தமது அரசியல் பாதை அமையும் என அவர் தெளிவுபடுத்தினார்.

Exit mobile version