Site icon அநேகன்

கோயில் நிதி கையாடல்; முன்னாள் தலைவர் கைது!

ஷா அலாம்:

கோயில் நிதியில் ரிம 50,000 கையாடல் செய்த புகாரில், 70 வயது மதிக்கத்தக்க முன்னாள் கோயில் தலைவர் ஒருவரை சிலாங்கூர் ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) கைது செய்துள்ளது.

2021-ஆம் ஆண்டு நடைபெறாத கோயில் பழுதுபார்ப்பு பணிகளுக்காக போலி ரசீதுகளை சமர்ப்பித்து முறைகேடு செய்ததாக அவர் மீதும், மற்றொருவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அந்த கோவிலின் பதிவு, கடந்த 2024 அக்டோபரில் ரத்து செய்யப்பட்டதால், போதிய நிதி கண்காணிப்பு இல்லை.. இந்த வழக்கில் தொடர்புடைய இருவர் மீதும் விரைவில் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version