Site icon அநேகன்

மூத்த ஊடகவியலாளர் டத்தோ கரம் சிங் வாலியா காலமானார்!

கோலாலம்பூர்:

புகழ்பெற்ற முன்னாள் TV3 சுற்றுச்சூழல் செய்தி அறிக்கையாளர் டத்தோ கரம் சிங் வாலியா (64) இன்று அதிகாலை காலமானார்.

தனித்துவமான பாணியிலும் பழமொழிகளுடனும் செய்தி வாசிப்பதில் வல்லவரான இவரது மறைவை அவரது தம்பி ஜஸ்பந்த் சிங் உறுதிப்படுத்தினார்.

கல்லீரல் மற்றும் சிறுநீரக பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த அவர், கோலாலம்பூரில் உள்ள தனது இல்லத்தில் உயிர் நீத்தார்.

Exit mobile version