Site icon அநேகன்

மற்றவர்களின் அடையாள அட்டையில் மானிய விலையிலான எரிபொருள் வாங்கினால் 3 ஆண்டுகள் சிறை!

கோலாலம்பூர்:

தனிநபர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களுடையது உட்பட மற்றவர்களின் MyKad-ஐப் பயன்படுத்தி மானிய விலையில் எரிபொருள் வாங்குவது சட்டவிரோதமாகும்.

இந்த விதிமீறலில் ஈடுபடுவோருக்கு 1990-ஆம் ஆண்டு தேசியப் பதிவுச் சட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரிம 20,000 அபராதம் விதிக்கப்படும்.

அல்லது 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என தேசிய பதிவகத்துறை JPN தலைமை இயக்குநர் பட்ருல் இஷாம் அலியாஸ் எச்சரித்துள்ளார்.

Exit mobile version