Site icon அநேகன்

பொதுச்சேவை ஊழியர்கள் தினமும் பாத்தேக் ஆடை அணிய ஊக்குவிக்கப்படுகிறார்கள்!

புத்ராஜெயா:

எரிசக்தி சேமிப்பிற்காக அரசு அலுவலகங்களில் குளிர்சாதன வெப்பநிலை 24°C ஆக உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, ஊழியர்கள் தினமும் ‘பாத்தேக்’ (Batik) ஆடை அணிய ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

வியாழக்கிழமைகளில் பாத்தேக் ஆடை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது, மற்ற நாட்களில் சீருடை பணியாளர்களைத் தவிர மற்றவர்கள் இதனை ஒரு மாற்றாக அணியலாம்.

அரசாங்கம் முன்னுதாரணமாக இருந்து உலகளாவிய எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்க இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக பொதுச் சேவைத் துறை தெரிவித்துள்ளது.

Exit mobile version