Site icon அநேகன்

யூபிஎஸ்ஐ ஊழியர் உயிரிழப்பு: விளையாட்டுக்கூட அறையில் சிக்கி பரிதாபம்

தஞ்சோங் மாலிம்:

பேராக், தஞ்சோங் மாலிம் சுல்தான் இட்ரிஸ் கல்விப் பல்கலைக்கழக (UPSI) விளையாட்டு வளாகத்தின் பூட்டிய துப்புரவுப் பொருட்கள் அறையில் சிக்கி 53 வயது ஊழியர் முகமட் ராட்ஸி அரிஃபின் உயிரிழந்தார்.

இன்று அதிகாலை 1.57 மணியளவில் தீயணைப்புத் துறையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் கதவை உடைத்துச் சென்றபோது, அவர் சடலமாக மீட்கப்பட்டதை மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

இந்தச் சம்பவம் குறித்து போலிஸ் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் வேளையில், அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

Exit mobile version