Site icon அநேகன்

இந்திய மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷனில் 2,200 இடங்களை மீட்குமா டி.ஏ.பி?

ஈப்போ:

தேசிய முன்னணி (BN) ஆட்சியில் இந்திய மாணவர்களுக்கு வழங்கப்பட்ட 2,200 மெட்ரிகுலேஷன் சிறப்பு இட ஒதுக்கீட்டை, 2018-இல் ஆட்சிக்கு வந்த பாக்காத்தான் ஹாராப்பான் 1.0 அரசாங்கம் தொடராதது ஏன் என பேராக் மஇகா இளைஞர் பிரிவுத் தலைவர் தியாகேஷ் கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தற்போது ஒற்றுமை அரசாங்கத்தில் அங்கமாக இருக்கும் அந்தோணி லோக் மற்றும் டி.ஏ.பி. தலைமை, வெறும் அறிக்கைகளோடு நிற்காமல் இந்திய மாணவர்களுக்கான அந்த பழைய சிறப்பு ஒதுக்கீட்டு முறையை மீண்டும் பெற்றுத்தர வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இது அரசியல் கோரிக்கை அல்ல, கல்வி சமத்துவத்தை நிலைநாட்டும் முயற்சி என்பதால், தகுதியுள்ள இந்திய மாணவர்கள் எவரும் கல்வி நீரோட்டத்தில் புறக்கணிக்கப்படக்கூடாது என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version