Site icon அநேகன்

இந்தோனேசியாவில் திருமணத்திற்குப் புறம்பான உறவு: ஜோடிக்கு 100 கசையடிகள்!

ஆச்சே:

இந்தோனேசியாவின் ஆச்சே மாகாணத்தில் திருமணத்திற்குப் புறம்பான உறவு கொண்ட ஒரு ஜோடிக்கு தலா 100 கசையடிகள் தண்டனையாக வழங்கப்பட்டது.

பண்டார் ஆச்சே பகுதியில் உள்ள பொதுப் பூங்காவில், பொதுமக்கள் முன்னிலையில் இந்தத் தண்டனை செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது.

ஷரியா சட்டத்தைப் பின்பற்றும் இந்தோனேசியாவின் ஒரே மாகாணம் ஆச்சே என்பதும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version