Site icon அநேகன்

மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டியதில்லை!

கோலாலம்பூர்:

கட்டாய மரண தண்டனை முறையை அரசாங்கம் அகற்றியுள்ளதால், குடிபோதையில் விபத்து ஏற்படுத்துபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் திட்டம் இல்லை என போக்குவரத்து அமைச்சர் லோக் சியூ ஃபூக் தெரிவித்தார்.

தற்போதுள்ள சட்டங்களின் கீழ், குடிபோதையில் வாகனம் ஓட்டி மற்றவர்களின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது ஏற்கனவே ‘கொலை’ குற்றச்சாட்டு சுமத்தப்பட முடியும் என்று அவர் விளக்கினார்.

மரண தண்டனைக்கு பதிலாக, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு குற்றவாளிகள் இழப்பீடு வழங்குவதை கட்டாயமாக்கும் வகையில் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சு திட்டமிட்டுள்ளது.

Exit mobile version