கோலாலம்பூர்:
அனைத்துலக சந்தை மாற்றங்களால் பெட்ரோல் RON95 லிட்டருக்கு 25 சென்னும், டீசல் (மானியமில்லாதது) 75 சென்னும் நாளை முதல் குறைகிறது.
இதன்படி RON95 லிட்டர் RM4.02 ஆகவும், டீசல் RM5.97 ஆகவும், RON97 விலை 25 சென் குறைந்து RM5.10 ஆகவும் அமலுக்கு வருகிறது.
விலை குறைந்தாலும் BUDI95 (RM1.99) மற்றும் சில மாநிலங்களுக்கான டீசல் மானிய விலையில் மாற்றமின்றி பழைய விலையிலேயே தொடரும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

