Site icon அநேகன்

16ஆவது பொதுத்தேர்தலில் புத்ராஜெயா, தித்திவாங்சா மற்றும் லாபுவான் தொகுதிகளில் போட்டியிட அமானா கட்சி விருப்பம்!

கோலாலம்பூர்:

கூட்டரசு பிரதேசங்களில் தற்போது இர் இடமும் இல்லாத நிலையில், குறைந்தது 3 அல்லது 4 தொகுதிகளில் களமிறங்கப்போவதாக, கூட்டரசு பிரதேச அமானா தலைவர் காலிட் சாமாட் கூறியுள்ளார்.

கடந்த முறை லாபுவானில் தோல்வியடைந்த போதிலும், மும்முனைப் போட்டி நிலவும் சூழலில் இம்முறை கூடுதல் இடங்களில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தற்போது பெரிக்காத்தான் நேஷனல் மற்றும் பாரிசான் நேஷனல் வசம் உள்ள இந்தத் தொகுதிகளைக் கைப்பற்றுவதே அமானாவின் முக்கிய இலக்காகும்.

Exit mobile version