Site icon அநேகன்

ஈடிஎஸ் ரயிலில் பாலியல் தொல்லை: சந்தேக நபர் கைது

கோலாலம்பூர்:

பேராக், ஈப்போவிலிருந்து கோலாலம்பூர் சென்ற ஈடிஎஸ் 9055 ரயிலில் பயணித்த பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்த நபரை கேடிஎம்பி (KTMB) அதிகாரிகள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரைத் தொடர்ந்து, தஞ்சோங் மாலிம் ரயில் நிலையத்தில் வைத்து சந்தேக நபர் உடனடியாகக் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைக்காகப் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய கேடிஎம்பி உறுதியளித்துள்ளதோடு, இது போன்ற அத்துமீறல்கள் குறித்து உடனடியாகத் தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

Exit mobile version