Site icon அநேகன்

பேருந்தை ஆபத்தான முறையில் இயக்கிய ஓட்டுநர் மற்றும் காதலிக்கு சிறை

ஜாசின்:

மலாக்கா, ஜாசின் அருகே ஓடும் பேருந்தில் காதலியை மடியில் அமரவைத்து ஆபத்தான முறையில் வாகனத்தை இயக்கிய ஓட்டுநருக்கு ஓராண்டு சிறை தண்டனையும், அவரது காதலிக்கு ஆறு மாத சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பெம்பான் ஓய்வுப்பகுதி அருகே நடந்த இந்தச் சம்பவத்திற்காக, இருவருக்கும் தலா ரிம5,000 அபராதமும் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ளது.

பேருந்து ஓட்டுநர் ஆரிப் ஃபஹ்மி மற்றும் நூர் அடிலா நஜ்வா ஆகிய இருவரும் தங்கள் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

Exit mobile version