Site icon அநேகன்

“சிலாங்கூரை விட்டு வெளியேறலாம்!”

ஷா அலாம்:

சிலாங்கூரில் நவீன பன்றிப் பண்ணைத் திட்டத்தை முன்மொழிந்த சட்டமன்ற உறுப்பினர் வோங் சியூ கீயின் செயல் மரியாதையற்றது என தேசிய முன்னணியைச் சேர்ந்த டத்தோ ஜமால் யூனோஸ் விமர்சித்துள்ளார்.

மாநிலத்தில் பன்றி வளர்ப்பை முழுமையாக நிறுத்த வேண்டும் என்ற சுல்தானின் உத்தரவை மதிக்காதவர்கள் சிலாங்கூரை விட்டு வெளியேறலாம் என அவர் சாடினார்.

சுற்றுச்சூழலைக் கருத்தில் கொண்டு, பன்றி வளர்ப்பிற்குப் பதில் இறைச்சியை இறக்குமதி செய்ய கூடுதல் உரிமங்களை வழங்குமாறு சுல்தான் ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது .

Exit mobile version