Site icon அநேகன்

சிலாங்கூரில் 688 இந்து ஆலயங்கள் அனுமதியின்றி இயங்குகின்றன!

ஷா அலாம்:

சிலாங்கூரில் கடந்த ஏப்ரல் 16-ஆம் தேதி வரை மொத்தம் 688 இந்து ஆலயங்கள் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இதில் 433 ஆலயங்கள் அரசு நிலத்திலும், 255 ஆலயங்கள் முறையான அனுமதியின்றி தனியார் நிலங்களிலும் கட்டப்பட்டுள்ளன.

பெட்டாலிங் மற்றும் கோலசிலாங்கூர் மாவட்டங்களில் இத்தகைய ஆலயங்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராயுடு தெரிவித்தார்.

நிலுவையில் உள்ள ஆலயப் பிரச்சினைகளைத் தீர்க்க நில ஒதுக்கீடு மற்றும் இடமாற்றம் போன்ற நடைமுறைகளை மாநில அரசு ஆராய்ந்து வருகிறது.

மாற்று இடங்களை அடையாளம் காணும் போது நிலத்தின் தகுதி, திட்டமிடல் மற்றும் உள்ளூர் மக்களின் தேவை ஆகியவை கருத்தில் கொள்ளப்படும்.

அனைத்து விண்ணப்பங்களும் லிமாஸ் (LIMAS) குழுவின் பரிசீலனைக்கு பிறகே மாநில அதிகாரிகளின் ஒப்புதலுக்கு கொண்டு செல்லப்படும் எனவும் பாப்பாராய்டு கூறினார்.

Exit mobile version