கோலாலம்பூர்:
முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி டத்தோ ஸ்ரீ அப்துல் ஹலீம் அமான், எதிர்வரும் மே 13 முதல் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (SPRM) புதிய தலைமை ஆணையராகப் பொறுப்பேற்கிறார்.
மூன்று முறை சேவை நீட்டிப்பு பெற்ற தற்போதைய ஆணையர் தான் ஸ்ரீ அஸாம் பாக்கியின் பதவிக்காலம் மே 12-உடன் முடிவடைவதால், அவருக்குப் பதிலாக ஹலீம் அமான் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதமரின் பரிந்துரையின் பேரில், மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் இந்த நியமனத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக, அரசாங்கத் தலைமைச் செயலாளர் ஷம்சுல் அஸ்ரி அபு பக்கர் தெரிவித்தார்.

