ஈப்போ:
கிந்தா இந்தியர் சங்கம் கடந்த 120 ஆண்டுகளாக விளையாட்டு, கல்வி, கலாச்சாரம் மற்றும் சமூக சேவைகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகிறது.
அந்த வகையில் நேற்று ஈப்போவில் உள்ள பாடாங் ஈப்போவில் நடைபைற்ற இளையொருக்கான கால் பந்துப போட்டியை சிறப்பாக நடத்தியது.
இந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் 16 அணிகள் பங்கேற்றுள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் டத்தோ தங்கராஜா கூறினார்.
இதில் இறுதி ஆட்டத்தில் ஈப்போ இளைஞர் அணியினர் 1-0 என்ற கோல் எண்ணிக்கையில் வசந்தன் கால் பந்துக் குழுவை வீழ்த்தியது.
இதில் வெற்றிப் பெற்ற முதல் அணியினர் ஆயிரம் வெள்ளி மற்றும் இரண்டாம் குழுவினருக்கு 750 வெள்ளி வழங்கப்பட்டது.
மூன்றாம் மற்றும் நான்காம் நிலை வெற்றியாளர்களுக்கு முறையே 300 வெள்ளி ரொக்கம் மற்றும் பதக்கங்கள் வழங்கபட்டது.
கடந்த ஆண்டு தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கிடையே கால பந்துப்போட்டி நடத்தப்பட்டது.
இதில் 46 அணிகள் கலந்து கொண்டதாகவும், ஆண்டுதோறும் நடைபெறும் இந்தப் போட்டி சங்கத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாகத் திகழ்கிறது என்று டத்தோ ஆர். தங்கராஜா கூறினார்
1906-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட கிந்தா இந்தியர் சங்கம், இந்த ஆண்டுடன் 120 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
இந்த நீண்டகால பயணத்தில் விளையாட்டை மட்டுமல்லாது கல்வி, கலாச்சாரம் மற்றும் சமூக சேவைகளிலும் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
“2024-ஆம் ஆண்டு தலைவர் பொறுப்பேற்றதிலிருந்து, நிர்வாகக் குழுவுடன் இணைந்து கல்வித் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறோம். அதேவேளையில், இளைஞர்களின் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் விளையாட்டுத் துறையையும் தொடர்ந்து ஊக்குவித்து வருகிறோம். இதுபோன்ற போட்டிகளை ஆண்டுதோறும் சிறப்பாக நடத்துவது எங்கள் உறுதிப்பாடாகும்,” என்று தெரிவித்தார்
மேலும், இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற ஆதரவு வழங்கிய நிதியுதவியாளர்கள், ஆதரவாளர்கள், ஏற்பாட்டாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பங்கேற்ற அனைத்து அணிகளுக்கும் அவர் நன்றியைத் தெரிவித்தார்.

