தைப்பிங்:
தேசிய அளவிலான 10 ஆவது செந்தமிழ் விழா பேரா, தைப்பிங்கில் உள்ள கிராண்ட் பாரோங் தங்கும் விடுதியில் நேற்று புதன் கிழமை கோலாகலமாக தொடங்கியது.
மூன்று நாள் டைபெறும் இப்போட்டியை பேரா ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ அ. சிவநேசன் தொடக்கி வைத்தார்.
அதன் நிறைவு விழா நாளை வெள்ளிக்கிழமை நடைபெறும்.அதில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு துணை கல்வி அமைச்சர் வோங் கா வோ பரிசுகளை எடுத்து வழங்க உள்ளார்.
இந்த நிகழ்வில் பேசிய பேராக் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ அ. சிவநேசன், தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், இளம் தலைமுறையினரிடையே அதன் பயன்பாட்டை விரிவுபடுத்துவதற்குமான முயற்சிகளுக்கு பேரா அரசு தொடர்ந்து ஆதரவு வழங்கும் என்று தெரிவித்தார்.
கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெற்ற அவர் இந்த நிகழ்வை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.
தமிழ் மொழி என்பது ஒரு தொடர்பு மொழி மட்டுமல்ல; அது தமிழர்களின் பண்பாடு, வரலாறு மற்றும் அடையாளத்தைப் பிரதிபலிக்கும் உயரிய பாரம்பரிய மொழி என்றும் அவர் குறிப்பிட்டார்.
மாணவர்கள் தமிழ் மொழியில் சிறந்து விளங்குவதற்கும், இலக்கியம், பேச்சுத்திறன், படைப்பாற்றல் போன்ற துறைகளில் தங்களது திறமைகளை வெளிப்படுத்துவதற்கும் இத்தகைய தேசிய அளவிலான விழாக்கள் சிறந்த தளமாக அமைகின்றன என்று டத்தோ அ. சிவநேசன் கூறினார்.
தமிழ்மொழி மற்றும் தமிழ்க் கல்வி மேம்பாட்டுக்காக கல்வி அமைச்சு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு பேராக் மாநில அரசும் தொடர்ந்து ஒத்துழைப்பை வழங்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.
இவ்விழாவில் நாடு முழுவதும் இருந்து ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வி அதிகாரிகள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் கலந்துகொண்டு, தமிழ் மொழியின் பெருமையையும் இலக்கியச் செழுமையையும் போற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.
இந்த நிகழ்விற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மலேசிய தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கழகத் தலைவர் பழனி சுப்பையா , இப்போட்டியில் ஆரம்ப தமிழ்ப்பள்ளி மற்றும் இடை நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் மாபெரும் விழாவாக கல்வி அமைச்சின் ஆதரவோடு கடந்த 10 ஆண்டு காலமாக நடைபெற்று வருகிறது என்றார்.
இந்த ஆண்டு இந்த நிகழ்விற்கு பேரா அரசு ஆட்சி குழு உறுப்பினர் டத்தோ அ. சிவநேசனனி்ன் பெரும் முயறசியால் 55 ஆயிரம் ரிங்கிட் மானியம் வழங்கபட்டது.
மேலும் கல்வி துணை அமைச்சர் வாங் கா வோ தேவையான நிதியை வழங்கியுள்ள தகவலையும் தெரிவித்தார்.
இப்போட்டியில் சபாவில் இருந்து சீன ஆடவர் ஒருவர் உட்பட 12 மாநிலங்களில் இருந்து மாணவர்கள் உட்பட மொத்தம் 211 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதில் பேச்சுப் பேட்டி , கவிதை ஒப்புவித்தல. திருகுறள் ஒப்புவித்தல் உட்பட 10 போட்டிகள் இடம் பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.ப

