Site icon அநேகன்

மடானி அரசிலிருந்து தேசிய முன்னணி வெளியேற வேண்டும்

@anegunnews

மடானி அரசாங்கக் கூட்டணியில் தேசிய முன்னணி நீடிப்பதில் அர்த்தமில்லை: மக்கள் சக்தி தலைவர் தனேந்திரன் No point in Barisan Nasional remaining in Madani Government coalition: Makkal Sakthi president Thanenthiran #anegunnews #anegunmedia

♬ original sound – AnegunNews – AnegunNews

கோலாலம்பூர்:

தேசிய முன்னணி மடானி அரசாங்கத்திலிருந்து வெளியேறுவது குறித்துப் பரிசீலிக்க வேண்டும் என மக்கள் சக்தி கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ். தனேந்திரன் வலியுறுத்தினார்.

தற்போதைய ஒத்துழைப்பு சமூகத்துக்கும் மக்களுக்கும் பயனளிக்கவில்லை என்றும், தேசிய முன்னணி மற்றும் அம்னோ தலைவர்கள் தொடர்ந்து அழுத்தங்களுக்கும் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கும் உள்ளாகி வருவதாகவும் அவர் கூறினார்.

இந்த விவகாரம் தொடர்பான தீர்மானத்தை தேசிய முன்னணியின் உயர்மட்டத் தலைமையிடம் கொண்டு சென்று விவாதிக்க வேண்டும் என வலியுறுத்திய தனேந்திரன், தேசிய முன்னணியின் நற்பெயரைக் காக்க மக்கள் சக்தி தொடர்ந்து துணை நிற்கும் என்று மக்கள் சக்தியின் 18-ஆவது ஆண்டு பொதுக்கூட்டத்தில் கொள்கை உரையாற்றியபோது அவர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தைத் தேசிய முன்னணித் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹமட் ஜாஹிட் ஹமிடி தொடக்கி வைத்தார்.

“இந்த மடானி அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டும் என முன்மொழிகிறேன். போதும், நமது தலைவர்கள் தொடர்ந்து சோதிக்கப்படுவது போதும்,” என தனேந்திரன் கூறினார்.

Exit mobile version