கோலாலம்பூர்:
மலேசியப் பிறப்புச் சான்றிதழ்களில் தமிழர்களின் இன அடையாளத்தை ‘தமிழ்’ அல்லது ‘தமிழர்’ எனத் தனியாகப் பதிவு செய்யும் வகையில் மலேசியப் பதிவுத்துறை அனுமதி வழங்க வேண்டும் என மலேசியத் தமிழர் தேசியப் பேரவை வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக, வரும் அக்டோபர் 11ஆம் தேதி
@anegunnews “We Are Tamils” Conference to Uphold Tamil Identity
காலை 7.30 மணி முதல் மாலை 3 மணி வரை சா ஆலாம், சிலாங்கூரில் ‘நாங்கள் தமிழர்’ என்ற கருப்பொருளில் இன அடையாள மாநாடு நடைபெறவுள்ளதாக பேரவை தெரிவித்துள்ளது.
மொழி, இனம், பிறப்பு ஆகிய அடிப்படைகளில் தங்களைத் தமிழர் என அடையாளப்படுத்தும் மலேசியத் தமிழர்கள், மதம் மற்றும் அரசியல் வேறுபாடுகளைக் கடந்து மாநாட்டில் பெருந்திரளாகக் கலந்துகொள்ள வேண்டும் என்றும் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.
மேலும், தங்கள் பிறப்புச் சான்றிதழில் இன அடையாளத்தை ‘தமிழ்/தமிழர்’ எனக் குறிப்பிட விரும்புவோரின் விண்ணப்ப நடைமுறையை எளிமைப்படுத்த வேண்டும் என்றும், தேவையான துணை ஆவணங்கள் இல்லாத நிலையில் தாய்மொழியை உறுதிப்படுத்தி விண்ணப்பங்களை ஏற்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் பிறப்புச் சான்றிதழ்களில் ‘இந்தியர் தமிழ்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்த அடையாளம் ‘இந்தியர்’ என மட்டும் மாற்றப்பட்டிருந்தால், அந்தப் பழைய பதிவுகளை மீட்டெடுத்து, விருப்பமுள்ளவர்கள் தங்களின் இன அடையாளத்தை ‘தமிழ்/தமிழர்’ எனக் குறிப்பிடுவதற்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் பேரவை கோரியுள்ளது.
இந்த நடைமுறை தொடர்பாக நாடு முழுவதும் உள்ள பதிவுத்துறை அலுவலகங்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தெளிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு, முறைப்படுத்தப்பட்ட நடைமுறை உருவாக்கப்பட வேண்டும் என்றும் பேரவை வலியுறுத்தியுள்ளது.

