கோல சிலாங்கூர், நவ. 2-
மாணவர்களின் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் நோக்கில் கோல சிலாங்கூர், சிலாங்கூர் ரிவர் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த 88 மாணவர்களுக்கு மனிதவள அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் சைக்கிள்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.
இந்நடவடிக்கையானது மக்களின் கல்வி மற்றும் சமூக நலனில் டத்தோஸ்ரீ ரமணன் காட்டி வரும் அக்கறையைப் புலப்படுத்துவதாக கெஅடிலான் கோல சிலாங்கூர் தொகுதி தலைவர் சிவபாலன் குறிப்பிட்டார்.
இத்தகு உன்னத முயற்சி தொடரப்படுவதோடு கல்வி கற்ற, போட்டியாற்றல்மிக்க மற்றும் வெற்றிபெற்ற எதிர்கால சந்ததியினரை உருவாக்க உதவும் என்றார்.
சைக்கிள்கள் அன்பளிப்பு நிகழ்ச்சியோடு மாணவர்கள், தங்களுடைய பெற்றோர்களுடன் இணைந்து மிகவும் உற்சாகத்துடனும்,குடும்ப உணர்வுடனும், 2026 தீபாவளி கொண்டாட்டத்தில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
பள்ளி மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு சிறப்பான முறையில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த ஹேமநாதன் தலைமையிலான பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினரை சிவபாலன் வெகுவாகப் பாராட்டினார்.
அதே வேளையில், மக்களின் கல்வி மற்றும் சமூக நலன் மீது டத்தோ ஸ்ரீ ரமணன் காட்டி வரும் பரிவும் அக்கறையும் போற்றுதலுக்குரியதாகும் என்றார்.

