போர்ட்டிக்சன், அக். 12-
நாளை போர்ட்டிக்சன் நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்திய சிறுமியுடன் ஐ ஃபை , 5 விரல்களைத் தொட்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டார்.
அன்வார் இடைத்தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது அந்த சிறுமி அவரை அணுகி ஐ ஃபை வாழ்த்து பரிமாறிக் கொள்ள அழைத்திருக்கின்றார்.
வாக்காளர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தபோது அந்த சிறுமி தம்மை அணுகி வாழ்த்து பரிமாறிக் கொண்டது தம்மை நெகிழ வைத்ததாக அன்வார் தன்னுடைய முகநூலில் பதிவேற்றம் செய்திருந்தார்.

