கூச்சிங் | 31/7/2021

கோவிட்-19 காலத்தில் சரவாக் மாநிலத் தேர்தலை ஒத்திவைக்க அம்மாநிலத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சரவாக் ஊரடங்கு சட்டம் 2021 நேற்று வெளியிடப்பட்டுள்ள நிலையில் அஃது அடுத்த மாதம் 2 ஆம் நாள் நடப்புக்கு வருகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு 2/2/2022 ஆம் நாள் வரை ஊரடங்கு நடப்பில் இருக்கும்.

நாளை நாடு முழுமையையும்  ஊரடங்கு முடிவுறுகிற நிலையில், சரவாக் மாநிலத்திற்கு மட்டும் தனியாக ஊரடங்கு பிறாப்பிக்கப்பட உள்ளது.

மாமன்னரும் பிரதமர் மகியாதீன் முகம்மது யாசினும் கையொப்பமிட்ட அந்த ஊரடங்குச் சட்டப்படி, ஊரடங்கு முடிவடைந்த அடுத்த 60 நாட்களுக்குள் சரவாக் மாநிலத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என வரையறுக்கப்பட்டுள்ளது. எனவே, அத்தேர்தலை ஒத்தி வைக்கவே இப்போது சரவாக் மாநிலத்திற்கு மட்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.