மகிழ்ச்சி எங்கும் தங்கட்டும்!டத்தோ ரமணனின் தீபாவளி வாழ்த்து

303

கோலாலம்பூர், நவ.12-

இன்று கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை அனைவரின் வாழ்விலும் சந்தோஷத்தையும் முன்னேற்றத்தையும் கொண்டு வரட்டும்  என்று மலேசிய இந்திய சமூக உருமாற்றுப் பிரிவின்  சிறப்பு குழு தலைவர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் தனது தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

தீபாவளி திருநாளில் அனைவரின் உள்ளங்களிலும் இல்லங்களிலும் மகிழ்ச்சி நிறைந்திருக்கட்டும்.இன்றைய நாள் வாழ்வில் அனைத்து வளங்களும் பெறுவதற்கான அஸ்திவாரத்தை ஏற்படுத்தும் ஒரு திருநாளாக திகழட்டும்  என்றார்.

தீப ஒளி எங்கும் பரவி  கல்வி, பொருளாரம், சமூக நலன்  என அனைத்து துறைகளிலும் இந்திய சமூகத்தில் ஆக்கப்பூர்வ உருமாற்றத்தைக் கொண்டு வரட்டும்.

“அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்”