தாப்பா, ஏப். 22-வரும் சனிக்கிழமை நடைபெறும் ஆயர் கூனிங் சட்டமன்றத் இடைத்தேர்தலில் 70 விழுக்காட்டிற்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களிப்பர் என்று எதிர்ப்பார்க்கப்படுவதாகத் தேர்தல் ஆணைய தலைவர் டத்தோஸ்ரீ ரம்லான் ஹருண் தெரிவித்தார்.

வாக்களிக்கும் தினத்தன்று மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் வாக்காளர்கள் காலை முதல் வாக்களிக்க செல்லுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் இன்று நடைபெற்று வரும் முன் கூட்டியே வாக்களிப்பில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள அதிகாரிகள்,காவல்துறையினர், அவர்களின் துணை உட்பட 500 வாக்காளர்களில் 90 விழுக்காட்டினர் வாக்களிப்பார்கள் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இன்று காலை 8 மணிக்கு முன் கூட்டியே வாக்களிப்பு தொடங்கப்பட்டது.

ஆயர் கூனிங் சட்டமன்ற உறுப்பினர் இஷாம் ஷாருடின் கடந்த பிப்ரவரி 22-ஆம் தேதி மாரடைப்பால் காலமானார்.

இதனைத் தொடர்ந்து இத்தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.