கோலாலம்பூர், ஜூலை 10 –
மலேசியாவின் முன்னணி உள்ளடக்கம் மற்றும் பொழுதுபோக்கு நிறுவனமான ஆஸ்ட்ரோ, ஜூலை 14, இரவு 9 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) வாயிலாகத் தொலைக்காட்சி, ஆஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட் மற்றும் சூகா ஆகியவற்றில் முதல் ஒளிபரப்புக் காணும் தனது விண்மீன் பிரத்யேகத் தொடரான ஆதிரா மூலம் பெண்களுக்கு அதிகாரமளித்தலை முன்னிலைப்படுத்துகிறது.
பிரபலமான உள்ளூர் மலாய் தொடரான ஷுர்கா இது புக்கான் முடா (Syurga Itu Bukan Mudah)வைத் தழுவி உருவாக்கப்பட்ட ஆதிரா, நகர்ப்புற மற்றும் ஆடம்பர வாழ்க்கை முறையின் அடிப்படையில் மறுகற்பனை செய்யப்பட்டு குடும்ப வன்முறை உட்பட அனைத்து வகையான வன்முறைகளுக்கும் துஷ்பிரயோகங்களுக்கும் எதிராகப் பெண்கள் குரல் கொடுக்கவும் செயல்படவும் வேண்டும் என்ற முக்கியக் கருத்தை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
அமைதியாகத் துன்பப்படுவதை விட உதவி நாடுவதை இது ஊக்குவிக்கிறது. ஆர். அசிசான் இயக்கிய இந்தத் தொடரில் வழக்கமுறையை (ஸ்டீரியோடைப்களை) உடைத்துப், பாரம்பரிய பாலின பாத்திரங்களை மீறி சவால்களைக் கடந்து, நிதிச் சுதந்திரத்தை நிலைநிறுத்தும் ஒரு துணிச்சலான மற்றும் உறுதியான கதாபாத்திரமான ஆதிரா என்ற முன்னணிக் கதாபாத்திரத்தில் ரூபினி சம்பந்தன் அறிமுகமாகிறார்.
திருமணத்திற்குப் பின்னர் வாழ்க்கையில் எதிர்மறையான மாற்றங்களை எதிர்கொள்ளும் ஒரு வலிமையான, சுதந்திரமான பெண்ணின் பயணத்தை ஆதிரா சித்தரிக்கிறது. தனது கணவர் தர்மாவின் தவறான நடத்தை மற்றும் ஒரு நச்சு ஆண் குழுவுடனான தொடர்புகள், குறிப்பாக அச்சுறுத்தப்படும் அவர்களின் குழந்தையின் பாதுகாப்பு அவரை விளிம்பிற்குத் தள்ளுகின்றது. கையாளுதல் மற்றும் அதிர்ச்சியுடன் ஆதிரா போராடும் வேளையில், தனது சுதந்திரத்திற்காகவும், தனது குழந்தையைப் பாதுகாக்கவும் விவாகரத்துக் கோருவதன் மூலம் போராடுவதா அல்லது மாற்றத்திற்கான நம்பிக்கையில் வலியைத் தொடர்ந்து சகித்துக்கொள்வதா என்பதை அவர் தீர்மானிக்க வேண்டும்.
ரூபினி சம்பந்தன், தீபன் ஜி, சாரா செல்வா, கவிதா சின்யா, கார்த்திக் ஜெய், அங்கயர் கன்னி, பிரிசில்லா நாயர் மற்றும் பல பிரபல உள்ளூர் நட்சத்திரங்களைக் கெரிஸ் மீடியா நெட்வொர்க்ஸ் சென்டிரியான் பெர்ஹாட்டிலிருந்து எலினா தாமஸ் தயாரித்த ஆதிரா சித்தரிக்கின்றது.
எழுச்சியூட்டும் கதைச்சொல்லல் மற்றும் தொடர்புடைய தருணங்களை உறுதியளிக்கும் ஆதிரா தொடரின் முதல் ஒளிபரப்பை ஒவ்வொரு திங்கள் முதல் வியாழன் வரை இரவு 9 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) வாயிலாகத் தொலைக்காட்சி, ஆஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட் மற்றும் சூகா ஆகியவற்றில் கண்டு மகிழுங்கள்.
ஆஸ்ட்ரோ ஒன் (Astro One) தொகுப்புகள் இப்போது ரிம49.99*-இலிருந்துக் கிடைக்கும். எளிதான ஸ்ட்ரீமிங், முடிவற்றப் பொழுதுபோக்கு. ஆஸ்ட்ரோ பைபரின் 500எம்.பி.பி.எஸ்-ஐ மாதத்திற்கு ரிம139.99* கட்டணத்தில் பொழுதுபோக்குத் தொகுப்புடன் இணைத்து உங்கள் ஸ்ட்ரீமிங் அனுபவத்தை மேம்படுத்துங்கள். ஆஸ்ட்ரோ ஒன் சந்தாதாரராக அல்லது மேம்படுத்த, www.astro.com.my அணுகவும் அல்லது 03 9543 3838 எண்ணுக்கு புலனம் செய்தி அனுப்பவும்.மேல் விபரங்களுக்கு www.astro.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.

