அகமதாபாத் ஜூலை 12-
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளாகி 241 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விமான விபத்து புலனாய்வு பணியகம் 15 பக்க முதற்கட்ட விசாரணை அறிக்கையை வெளியிட்டுள்ளது.
விமானம் புறப்பட்ட 32 நொடிகளில் இரண்டு எஞ்சின்களும் செயலிழந்ததாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எஞ்சின்களுக்கு எரிபொருள் செல்வது தடைப்பட்டதே விபத்துக்கு காரணம் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், எஞ்சின்களுக்கு எரிபொருள் செல்லாதது குறித்து விமானிகள் பேசிக்கொண்ட உரையாடல் குரல் பதிவு மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதில், ஒரு விமானி, “ஏன் எரிபொருள் துண்டிக்கப்பட்டது?” எனக் கேட்க, மற்றொரு விமானி, “நான் அல்ல” என பதிலளித்ததாக பதிவாகியுள்ளது.
விபத்து குறித்த மேலதிக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

