மஞ்சோங், ஜூலை 13-

பேரா, மஞ்சோங், கம்போங் டத்தோஸ்ரீ கமாருடின் எனும் பகுதியில்  பிரசித்தி பெற்ற அருள் மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேக விழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

இவ்விழாவிற்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் அ. சிவநேசன் சிறப்பு வருகை புரிந்தார்.

இந்த ஆலயத்திற்கு மாநில அரசாங்கத்தின் மானியமாக இதற்கு முன்பு 110, 000 ஆயிரம் வெள்ளியை வழங்கிய சிவநேசன் தற்போது மேலும் 40 ஆயிரம் வெள்ளி வழங்குவதாக உறுதி அளித்துள்ளார்.

இதன்  திருப்பணி் மற்றும் கும்பாபிஷேக விழா சிறப்புடன் நடைபெற மாநில அரசாங்கம் மற்றும் பொது மக்கள் பேராதவு வழங்கியதாக ஆலய கட்டடக் குழுத் தலைவர் சத்தியசிவம் ராசையா குறிப்பிட்டார்.

முன்பு சப்போக் தோட்டத்தில் அமைந்திருந்த இந்த ஆலயம் தோட்டத் துண்டாடலுக்குப் பின்னர் 1990 ஆம் ஆண்டு இக்கிராமத்தில் இடம் பெயர்ந்ததை அவர் சுட்டிக் காட்டினார் .

ஆலயத்தின் திருப்பணி கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட வேளையில் 30 லட்சம் வெள்ளி செலவிலான இதன் மகா கும்பாபிஷேகம் சுற்று வட்டார பக்தர்கள் புடை சூழ இன்று மிகச் சிறப்பாக நடைபெற்றதாக அவர் சொன்னார்.

இந்நிலையில் ஆலய திருப்பணிக்குப் பேராதரவு வழங்கிய நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் ஆலயத் தலைவர் சங்கர் கனகராஜா நன்றி தெரிவித்துக் கொண்டார்.