கோலாலம்பூர், ஜூலை 16-

நாட்டில், ரோன்97 பெட்ரோலின் சில்லறை விலை ரிம3.18-இலிருந்து 3 சென் உயர்ந்து லிட்டருக்கு ரிம3.21-ஆக விற்கப்படவுள்ளது.

அதேவேளையில், ரோன்95 பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரிம2.05-ஆக எவ்வித மாற்றமுமின்றி நீடிக்கும் என நிதியமைச்சு இன்று அறிவித்துள்ளது.

சபா, சரவாக் மற்றும் லாபுவானில் டீசல் விலை லிட்டருக்கு ரிம2.15-ஆக மாற்றங்கள் இன்றி இருக்கும் வேளை, தீபகற்பத்தில் ரிம2.88-இலிருந்து 3 சென் உயர்ந்து ரிம2.91-ஆக விற்கப்படும்.

இந்த விலை மாற்றம், நாளை 17ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதி வரையில் அமலில் இருக்கும்.

இதானியங்கி விலை நிர்ணய பொறிமுறை (APM) அடிப்படையில், அந்த வாராந்திர விலைகள் தீர்மானிக்கப்பட்டுள்ளன.

“உலக எண்ணெய் சந்தையின் போக்குகளை அரசாங்கம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. ரோன்97 மற்றும் டீசல் விலைகளை சந்தை இயக்கங்களுக்கு ஏற்ப சரிசெய்து, அதே நேரத்தில் மக்களின் நலனையும் பொருளாதார நிலைத்தன்மையையும் பேணுவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்கும்,” என நிதியமைச்சு கூறியது.