பத்துமலை, ஜூலை 19-
பத்துமலையில் ஒவ்வொரு படிக்கும் ஒரு திருப்புகழ் என டாக்டர் பண்பரசி, கனிமொழி தலைமையிலான சங்கீத கலாலய மாணவர்கள் வழங்கிய 7 மணி நேர திருப்புகழ் பாராயணம் பத்துமலை வளாகத்தை பக்தி பரவசத்தில் ஆழ்த்தியதாக மஇகா டத்தோ துணைத் தலைவர் ஸ்ரீ எம்.சரவணன் வருணித்தார்.
மொத்தம் 272 திருப்புகழ்கள். முருகப்பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட அபூர்வ இசை யாத்திரை.இந்நிகழ்வு மலேசிய சாதனைப் புத்தக பதிவு முயற்சியாக மேற்கொள்ளப்பட்டது.
“இந்த நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.இது பக்தியும் இசையும் இணைந்த ஒரு மறக்க முடியாத தருணம்” என்றார் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான சரவணன்.
இன்று அதிகாலை மணி 4.30க்குத் தொடங்கப்பட்ட 7மணி நேர இடைவிடாத இந்த திருப்புகழ் பாராயண நிகழ்ச்சியை சரவணன் தொடக்கி வைத்தார்.

