பட்டர்வொர்த், ஜூலை 21-

ஒவ்வோர் ஆண்டும் சிறப்பு விழாக் காலங்களில் உள்ளூர் இந்திய வர்த்தகர்கள் மட்டுமே வர்த்தகக் கண்காட்சிகளை நடத்த அனுமதிப்பப்படுவர் என பினாங்கு முதலமைச்சர் செள கோன் இயோவ் தெரிவித்துள்ளார்.

பினாங்கு வர்த்தகர்களின் வருமானத்தைக் காக்கவும் அவர்களின் வாழ்வாதாரத்தை நிலைநிறுத்தவுமே இந்த விதிமுறை அமலுக்கு வருவதாகவும் பினாங்கிற்கு வெளியிலிருந்து வரும் வர்த்தகர்களினால் பினாங்கின் வர்த்தகர்களின் வருமானம் பாதிப்படையக் கூடாதென்றும் செள கோன் இயோவ் குறிப்பிட்டார்.

பினாங்கிற்கு வெளியிலிருந்து வரும் வர்த்தகர்கள் வர்த்தகக் கண்காட்சிகளை ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 1லிருந்து ஜூன் 30 வரை மட்டுமே நடத்த அனுமதிக்கப்படுவர் என்றும் அவர்  குறிப்பிட்டார்.

-பொன் முனியாண்டி