சுபாங், ஜூலை 27-

மலேசிய இந்தியர் நகை வணிகர்கள் மற்றும் பொற்கொல்லர் சங்கத்தின் தலைவராக டத்தோ ஹாஜி அப்துல் ரசூல் மீண்டும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

இச்சங்கத்தின் ஆண்டு பேராளர் மாநாடு இன்று சுபாங் டோர்செட் தங்கு விடுதியில் நடைபெற்றது.

இதில் 2025-2027 ஆம் ஆண்டுக்கான புதிய பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

மலேசிய இந்தியர் நகைவணிகர்கள் மற்றும் பொற்கொல்லர் சங்கத்தின் தலைவராக 25 ஆண்டுகள் சங்கத்தை  சிறப்பாக வழிநடத்தி வந்த டத்தோ ஹாஜி அப்துல் ரசூல் பின் அப்துல் ரசாக்கை மீண்டும் தலைவராக பேராளர்கள் முன் மொழிந்தனர்.

அவ்வகையில் டத்தோ ஹாஜி அப்துல் ரசூல் மீண்டும் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சங்கத்தின் துணைத் தலைவராக சண்முகராசுவும் செயலாளராக வீரபாலனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

துணைச் செயலாளராக டத்தின்ஸ்ரீ டாக்டர் எஸ். யுகேஸ்வரி தேர்வானார்.

பொருளாளராக மனோகரன் மீண்டும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

முன்பு உதவித் தலைவராக இருந்த டத்தோ இப்ராஹிம் தற்போது நிர்வாக மன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

சங்கத்தின் நிர்வாக மன்ற உறுப்பினர்களாக டத்தோ யூவபாலன், புஷ்பநாதன், மகேன் ஆகியோர் தேர்வு பெற்றனர்.