கொழும்பு, ஆக. 22-

இலங்கையின் முன்னாள் அதிபரான ரணில் விக்ரமசிங்கே அரசின் நிதியை மோசடி செய்த குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப் பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டில் அரசு திவாலான நிலையில் அவர் அதிபராகப் பதவியேற்ற காலத்தில் அக்குற்றங்களைப் புரிந்ததாகச் சொல்லப்படுகிறது.

செல்வாக்குமிக்க குடும்பத்தில் பிறந்தவரான அவர், 29 வயதில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு 2022   ஆம் ஆண்டில் அதிபராகப் பதவியேற்றார்.

இலங்கை பிரதமராக இவர் 6 முறை பணியாற்றியதும் குறிப்பிடத்தக்கது.

-பொன் முனியாண்டி