பெட்டாலிங் ஜெயா:
புலம்பெயர்ந்தோர் தமிழ்க்கல்வி மாநாட்டிற்கு பங்கேற்பாளர்களைத் முன்தேர்வு செய்த பின் விண்ணப்பங்களைத் திறக்கப்படுவதாக முன் வைக்கப்பட்ட குற்றச்சாட்டைத் அம்மாநாட்டின் ஏற்பாட்டுக் குழு மறுத்துள்ளது.
ஏற்பாட்டுக் குழு விண்ணப்பதாரர்களை நிராகரிக்கவில்லை; புதிய பங்கேற்பாளருக்கும் பயிற்சி வழங்கி, மாநாட்டிற்கு அழைத்து செல்கிறோம்.
இந்த 3 ஆண்டுகளில் யாரையும் நிராகரிக்கவில்லை. பங்கேற்பாளர்கள் அதிகம் கலந்து கொள்ளவில்லை என்ற ஆதங்கம் மட்டுமே உள்ளது என்று மலேசியக் கல்வியாளர் குழுவின் ஒருங்கிணைப்பாளர் திரு முத்து நெடுமாறன் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
4-ஆம் புலம்பெயர்ந்தோர் தமிழ்க்கல்வி மாநாடு அடுத்த ஆண்டு 2026 ஜூலை 2 முதல் 5 வரை சென்னை, தமிழ்நாட்டில் நடைபெறவுள்ளதாக மலேசியக் கல்வியாளர் குழுவின் ஒருங்கிணைப்பாளர் இளந்தமிழ் கூறினார்.
மேலும், இன்றைய செய்தியாளர் சந்திப்பில் அமெரிக்காவில் கலிப்போர்னியா தமிழ் அகாடமி என்ற அமைப்பின் கீழ் தமிழ்ப்பள்ளிகளை ஏற்று நடத்தும் வெற்றிச் செல்வி கலந்து கொண்டார்.
இந்த மாநாடு அமெரிக்காவில் தமிழ் கல்வி திட்டத்திற்கு எவ்வாறு உறுதுணையாக இருப்பது குறித்து அவர் பகிர்ந்து கொண்டார்.
இம்மாநாடு தமிழ்க் கல்வி வளர்ச்சிக்கான தொழில்நுட்ப முன்னேற்றங்களை ஆராய்வதோடு, புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு தமிழ் கற்பதில் சிறந்து விளங்குவதற்கும் உலகத் தமிழறிஞர்களுடன் இணைந்து செயல்படுவதற்கும் நடத்தப்படுகிறது.
மலேசியாவிலிருந்து 30 பேர் கொண்ட கல்வியாளர் குழு இம்மாநாட்டில் பங்கேற்கவுள்ள நிலையில் அக்குழுவிற்கு பேராசிரியர் என்.எஸ் இராஜேந்திரன் தலைமை தாங்குகிறார்.
ஆர்வமுள்ள கல்வியாளர்கள் மற்றும் படைப்பாளர்கள் ஆய்வு கட்டுரைகளைச் சமர்ப்பிக்கும்படி இளந்தமிழ் அழைப்பு விடுத்துள்ளார்.

