ஷா ஆலம்:

ஆவேசமாக நடந்து கொண்டதாகவும் பொய்யான குற்றச்சாட்டுகளைப் பரப்பியதாகவும் கூறி தம் மீது வழக்கு தொடர்ந்துள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர், எஸ்.பிரகாஷை நீதிமன்றத்தில் சந்திக்க தயாராக இருப்பதாக தேசிய ஒழுக்கம் மற்றும் நட்புறவுச் நலச்சங்கத்தின் நிறுவனர் ஜோசப் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

பிரேகாஷ் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த சந்திப்பின் போது தன்னிடம் கடுமையாக நடந்து கொண்டதற்கான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாக ஜோசப் பிரகாஷ் கூறினார்.

அதனால், அவர் தன் மீது தொடுத்துள்ள வழக்கைப் பற்றி தமக்கு எவ்வித அச்சமும் இல்லை என்று ஜோசப் பிரகாஷ் தெரிவித்தார்.

மேலும், தான் முதலில் ஆவேசமாக நடந்து கொண்டதாக கூறும் நிலையில் சட்டமன்ற உறுப்பினர் அவருடைய அலுவலகத்தில் சிசிடிவி-யிலுள்ள ஆதராங்களை வெளியிட வேண்டும் என்று ஜோசப் ஷா ஆலமிலுள்ள ஓர் உணவகத்தில் நடைபெற்ற் செய்தியாளர் சந்திப்பில் கேட்டுக் கொண்டார்.

மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் தன்னிடமும் தன்னுடன் வந்த வியாபாரிகளிடமும் கடுமையாக நடந்து கொண்டது மட்டுமல்லாமல் அங்கிருந்து தங்களை விரட்டியது முறையற்ற செயல் என்று ஜோசப் பிரகாஷ் கூறினார்.

முன்னதாக, கடந்த புதன்கிழமை தனது சேவை மையத்தில் அனுமதியின்றி நுழைந்து கடுமையாக பேசியது, தன்னைப் பற்றிய தவறான குற்றச்சாட்டுகளைச் சமூக ஊடகங்களில் பரப்பியது போன்ற காரணங்களுக்காக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பிரகாஷ் ஜோசப் மீது வழக்கு தொடரவுள்ளதாக தெரிவித்திருந்தார்.

நவம்பர் 1-ஆம் தேதி, கோத்தா கெமுனிங் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்புகளுக்கான முன்னேற்பாடுகளின் போது ஜோசப் உட்பட அவருடன் வந்த பலர் இடையூறுகளை ஏற்படுத்தியதாகவும் தீபாவளி சந்தை வர்த்தகர்களை ஏமாற்றியதாக குற்றம் சாட்டியதாகவும் எஸ்.பிரகாஷ் குற்றம் சாட்டினார்.

இந்நிலையில் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்புகளுக்கான முன்னேற்பாடுகளின் போது தாம் இடையூறுகளை ஏற்படுத்தவில்லை. மாறாக, வர்த்தகர்களுக்கு எதிரான அநீதி குறித்து புகாரளிக்கவே சென்றதாக ஜோசப் தெரிவித்தார்.

அந்தச் சந்திப்பில் ஜோசப் பிரகாஷ், தீபாவளி சந்தை வர்த்தகர்கள் எதிர்கொண்ட நஷ்டம் குறித்து விளக்கம் கேட்டு சென்றதாக கூறினார்.

ஆனால் தங்களின் கேள்விகளுக்கு முறையாக பதிலளிக்காமல் சட்டமன்ற உறுப்பினர் தங்களை அலுவலகத்திலிருந்து வெளியேற்றியதாக ஜோசப் தெரிவித்தார்.

தற்போது , தான் எதற்கும் பயப்படவில்லை; கோத்தா கெமுனிங் தீபாவளி சந்தை வர்த்தகர்களுக்கு நீதிக்கு நீதி கிடைக்கவேண்டும். அதனால் அவரை நீதிமன்றத்தில் சந்திக்கத் தயாராக இருப்பதாக ஜோசப் பிரகாஷ் தெரிவித்தார்.

இதுவரைத் தம் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக கூறுவது தொடர்பாக தனக்கு எந்த அறிவிப்பும் கிடைக்காத நிலையிலும் தனது வழக்கறிஞர் குழு தயார் நிலையில் இருப்பதாக ஜோசப் பிரகாஷ் கூறினார்.